தமிழகத்தில் அக்.10 வரை கனமழை எச்சரிக்கை.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா? - வானிலை மையம் எச்சரிக்கை!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழைச் சூழல் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை

நாளை கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம்.

நாளை மறுதினம் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, டெல்டா மாவட்டங்கள், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை மாணவி

அக்டோபர் 10ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஈரோடு, நாமக்கல், சேலம், திருச்சி, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி மற்றும் தென் மாவட்டங்கள் பலவற்றில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

வரும் நாட்களில் தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.