ஆகஸ்ட் 2 வரை 3 மாவட்டங்களுக்குக் கனமழை அலெர்ட்!

 
வெயில் மழை

தமிழக கடலோரப் பகுதிகளில் வளிமண்டலக் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை ஒன்று தொடர்ந்து நிலவி வருகிறது. இதன் காரணமாகத் தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும். மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் ஆகஸ்ட் 2 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

குறிப்பாக நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்திற்கு மத்தியிலும் மாநிலத்தின் சில பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 4°C வரை உயரக் கூடும். வெப்பம் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். வானிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் பொதுமக்கள் தங்களது பயணங்களைத் திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மழை கனமழை மும்பை

கடல் பகுதியில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல் தென்தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான கரைக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.