தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை.. பள்ளிகளுக்கு விடுமுறையா? - வானிலை மையம் அலர்ட்!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வட உள்நாட்டிலிருந்து குமரிக்கடல் பகுதி வரை நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பாதை மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் மழைப்பொழிவு தீவிரமடைந்துள்ளது. நீலகிரி, தேனி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்), கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மழை விடுமுறை

தொடர் மழை மற்றும் மிக கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். மேலும், மழை பொழியும் நேரங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.