இன்று தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - பத்திரம் மக்களே!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!! அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்கள் என மொத்தம் 13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புதிய வரைபடத் தரவுகளின்படி, இன்று கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி. ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில்  சில இடங்களில் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், தாழ்வான பகுதிகளில் தற்காலிக நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மழை

தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பொறுத்தவரை தற்போதைக்குக் கனமழைக்கான வாய்ப்புகள் இல்லை என்று வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது. "சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மட்டுமே லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்."

மழை மாணவி

உள் மாவட்டங்களில் இடி, மின்னல் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், மழை பெய்யும் போது விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் திறந்தவெளிகள், நீர்நிலைகள் மற்றும் உயரமான மரங்களின் அடியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.