தமிழகத்தில் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு!
Aug 10, 2026, 17:30 IST
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை மற்றும் இரவு நேரங்களில் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இந்த மழைக்கு முக்கியக் காரணமாகும்.
