இன்று தமிழகத்தில் 2 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

 
மழை

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், இன்று  காலை 10 மணி வரை 2 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 தென் மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.