தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை வெளுக்கும்.. நாளை 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

 
மழை கனமழை மழை கனமழை

தமிழகத்தில் நிலவி வந்த கடுமையான கத்திரி வெயிலின் தாக்கம் தற்பொழுது படிப்படியாகக் குறைந்து வரும் வேளையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கப்போவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் இன்று (மே 30) மதியத்திற்குப் பிறகு மேகமூட்டங்கள் திரண்டு, ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மத்திய உள் மாவட்டங்கள் என மொத்தம் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்.

இன்றைய மழையின் தொடர்ச்சியாக, நாளை ஞாயிற்றுக்கிழமை மழையின் தீவிரம் மேலும் அதிகரித்து, தமிழகத்தின் பரப்பளவில் பாதிக்கும் மேற்பட்ட மாவட்டங்களை நனைக்கவுள்ளது. நாளை சுமார் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. குறிப்பாகக் கொங்கு மண்டலம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை மழையின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

மழை கனமழை

மழை மேகங்களின் நகர்வு மற்றும் கடல் பகுதியில் வீசும் பலத்த காற்றின் வேகம் காரணமாக, மன்னார் வளைகுடா மற்றும் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் குறிப்பிட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.