தொடர் கனமழை.. இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
கனமழை விடுமுறை பள்ளிகள் குடை வெள்ளம் மழை

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதைத் தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும் சேர்த்து இன்று 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம் மற்றும் எச்சரிக்கை: இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தமிழ்நாடு கடற்கரைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகக் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலான மழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மழை விடுமுறை

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, தென்காசி, ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதே போன்று ராஜ ராஜ சோழனின் சதய விழாவினை  முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் கந்தூரி விழாவினை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருப்பத்தூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.