தொடரும் கனமழை... புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு!
Oct 23, 2026, 08:22 IST
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
