சென்னையில் கனமழை எதிரொலி.. நள்ளிரவில் NDRF அதிகாரிகளுடன் அமைச்சர் தீவிர ஆலோசனை!

 
கனமழை மழை ஆதவ்  NDRF அதிகாரிகள்

சென்னையில் நள்ளிரவு வரை பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரிதமான நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை வரவழைக்கப்பட்டுள்ளது. 

மழை ஆட்டோ

மாநில பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீட்புப் பணிகள் மற்றும் மழைநீரை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து, அமைச்சரும் மாநகராட்சி ஆணையரும் நள்ளிரவில் என்.டி.ஆர்.எஃப் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினர். மேலும், வெள்ள பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயமுள்ள பகுதிகளில் மக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளும் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.