சென்னையில் கனமழை.. பொதுமக்களின் உதவிக்காக '1913' அவசர உதவி எண் அறிவிப்பு!

 
மழை கனமழை ஆட்டோ

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதன் காரணமாகச் சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மழைநீர் தேக்கம் உள்ளிட்ட அவசர உதவிகளுக்காகத் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இடி மின்னல் மழை

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் மழைநீர் தேங்கினாலோ அல்லது வேறு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டாலோ 1913 என்ற கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. 

இன்று 13 மாவட்டங்களில் கனமழை!! மக்களே உஷாரா இருங்க!!

மேலும், தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் மீட்புப் பணிகளுக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.