சென்னையில் கனமழை... செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு - அதிகாரிகள் தீவிரக் கண்காணிப்பு!
Oct 18, 2026, 11:40 IST
சென்னையில் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேற்றைய தினம் வினாடிக்கு 576 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 655 கனஅடியாக உயர்ந்துள்ளது.

மொத்தம் 24 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது 14.31 அடியாகப் பதிவாகியுள்ளது. நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருவதால், ஏரியின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நீரின் அளவைத் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
