கேரளாவில் கனமழை.. நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. தேர்வுகள் ரத்து; பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

 
கேரளா

கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், பத்தனம்திட்டா மற்றும் கண்ணூர் ஆகிய இரு மாவட்டங்களில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாகத் பத்தனம்திட்டா மற்றும் கண்ணூர் ஆகிய 2 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், மற்றும் பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மழை

மழைக்கால பாதிப்புகள்: மாநிலத்தில் பெய்து வரும் கனமழை, நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு தொடர்பான அசம்பாவிதங்களில் சிக்கி இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி மாயமான 6 பேரைத் தேடும் பணி தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழை கனமழை மும்பை

வெள்ள அபாயம் உள்ள பகுதிகள் மற்றும் நதிக்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு மாறுமாறு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.