தமிழகத்தில் கனமழை... வலுப்பெறுகிறது புயல் சின்னம்... இந்த மாவட்டங்களில் எல்லாம் மழை கொட்டும்... பத்திரம் மக்களே!

 
புயல் காற்றழுத்த தாழ்வு வங்கக்கடலில்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, இன்று புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் உருவானால் அதற்கு இந்தியா பரிந்துரைத்துள்ள ‘முரசு’ என்ற பெயர் சூட்டப்படும். 

புயல் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலம்

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாகும் நிலையில் இன்று வலுப்பெற்று புயலாகவும் மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு நாளை நவம்பர் 2-ம் தேதி மாலை ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிக்கு அருகே மத்தியமேற்கு வங்கக்கடலை அடையக்கூடும்.

வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வுப் பகுதி  கனமழை மழை

நாளை நவம்பர் 2-ம் தேதி நீலகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 3-ம் தேதி கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 1 முதல் 3-ம் தேதி வரை வடதமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.