வயநாட்டில் மீண்டும் கனமழை... மீட்புப்பணிகள் பாதிப்பு - அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை!

 
நிலச்சரிவு

கேரளாவில் ஏற்கனவே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுப் பெரும் பாதிப்புக்குள்ளான வயநாடு பகுதியில், தற்போது மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, அங்கு நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை தீவிரமடைந்து வருவதைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிலச்சரிவு

ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மேலும் புதிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாமல் தடுக்கவும், தடைபட்டுள்ள மீட்பு நடவடிக்கைகளை மாற்று வழிகளில் துரிதப்படுத்தவும் அரசு அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தற்போது தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

நிலச்சரிவு

வயநாட்டில் நிலவும் இந்த மோசமான வானிலைச் சூழல், அங்குள்ள பொதுமக்களிடையேயும், மீட்புப் படையினரிடையேயும் கூடுதல் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.