மும்பையில் கனமழை... பள்ளிகளுக்கு விடுமுறை.. வெளியே வராதீங்க... காவல் துறை அறிவுறுத்தல்!

 
இன்று வடகிழக்கு பருவமழை  தொடக்கம்!      நம்ம மாவட்டத்திற்கு கனமழை !

நேற்று முதல் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஒருவர் பலியானார். 

இன்றும் காலை முதலே மும்பையில் கனமழை தொடர்ந்து வருவதால் தானே, பால்கர், புனே, பிம்ப்ரி - சின்ச்வாட் பகுதிகளுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை மழை கர்நாடகா

மழை நீர் தேங்கியதாலும், தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் பல இடங்களில் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மும்பை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 14 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன. மும்பை மாநகராட்சியும், காவல்துறையும் மக்கள் அத்தியாவசியத் தேவைகள் இன்றி வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு இன்று காலை 8.30 மணி வரையில் ரெட் அலர்ட் விடுத்திருந்தது. இதனையொட்டி மும்பை மாநகராட்சி ஆணையர் பூஷண் கக்ரானி கட்டுப்பாட்டு அறைகளை அமைத்து மழை தொடர்பான பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும்படி துணை ஆணையர்கள், செயல் பொறியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

குஜராத் கனமழை

மேலும் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வரை மும்பையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 8.30-க்குப் பின்னர் மும்பைக்கு ஆரஞ்சு அலர்ட்டும், தானே, பால்கர், ராய்கட் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை மும்பையின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் மேல் மழை பெய்தது. இதில் அந்தேரியில் நிரம்பி வழிந்த கால்வாயில் மூழ்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். அதிகபட்சமாக கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் சராசரியாக 169.85 மில்லி மீட்டர் மழையும், மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 104.17 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web