இன்று சென்னை உட்பட 9 மாவட்டங்களில் கனமழை... லீவு நாளில் சிக்கிக்காதீங்க!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!! அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) நிலவுகிறது. இதன் தாக்கம் காரணமாகத் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

மழை

இன்று காலை 10 மணி வரை  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் (மணிக்கு 40-50 கி.மீ வேகம்) கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

கன மழை

மழையின் காரணமாகச் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவினாலும், உட்புற மாவட்டங்களான ஈரோடு, வேலூர் மற்றும் தருமபுரியில் வெப்பத்தின் தாக்கம் 40°C முதல் 42°C வரை நீடிக்க வாய்ப்புள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்த பூர்ணிமா மற்றும் மே தின விடுமுறைக்காகச் சுற்றுலாத் தலங்களுக்குச் செல்பவர்கள் மற்றும் பொது மக்கள் வானிலை மாற்றத்தைக் கருத்தில் கொண்டு தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.