சென்னையில் அதி கனமழை... பொதுமக்களின் செல்போன்களில் ஒலித்த ரெட் அலர்ட் அலாரம்!

 
ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னையில் இன்று அக்டோபர் 18ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுடன், நகருக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.

சென்னையில் தீவிர வானிலை மாற்றம் மற்றும் அதி கனமழைக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவர்தம் செல்போன்களுக்கு நேரடியாக எச்சரிக்கை அலாரங்கள் அனுப்பப்பட்டன. தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (TNSDMA) சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், அவசியமின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களே உஷார்...  இந்த மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்... !

சென்னையைத் தவிர்த்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட்

பாதிக்கப்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மாவட்ட நிர்வாகங்களின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.