தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Sep 5, 2026, 10:30 IST
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, சேலம், திருவள்ளூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
