இன்று விநாயகர் சதுர்த்தி நாளில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

வடக்கு விதர்பா பகுதி முதல் மன்னார் வளைகுடா வரை நிலவிவரும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கன மழை

தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 11 மாவட்டங்களில் இந்த மழை எதிர்பார்க்கப்படுகிறது.