இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்!

 
மழை மழை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் சென்னையில் இன்று காலையிலிருந்தே வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. சென்னையின் தற்போதைய நிலவரப்படி  வெப்பநிலை: 31°C, மணிக்கு 8 மைல் (மேற்கு திசையிலிருந்து) அதிகபட்ச வெப்பநிலை: 37°C வரை உயர வாய்ப்பு குறைந்தபட்ச வெப்பநிலை: 29°C ஆகப் பதிவாகக்கூடும் மாலையோ அல்லது இரவோ நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வெப்பத்தைத் தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன மழை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை காரணமாகச் சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை கனமழை

இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலகங்களுக்குச் செல்வோர் முன்னெச்சரிக்கையாகக் குடைகளை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.