தமிழகத்தில் இன்றிரவு 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!

 
கன மழை

தமிழகத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட போதிலும், வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகச் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, நீலகிரி, திருச்சி, விருதுநகர், கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி ஆகிய 15 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பதிவாக வாய்ப்புள்ளதால், மாலை நேரத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்வோர் மற்றும் வாகன ஓட்டிகள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.