இன்று தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தெற்கு தெலங்கானா முதல் மன்னார் வளைகுடா வரை ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருவதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

இந்த வானிலை மாற்றத்தின் காரணமாக, தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. இப்போதைய நிலவரப்படி, அப்பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது