அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

 
விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

 

தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 :  மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

 குறிப்பிட்ட சில மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்று (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 ஏனைய தமிழகப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.