நாளை தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 
வெயில் மழை

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நாளை ஆகஸ்ட் 15 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த திடீர் வானிலை மாற்றம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விடுமுறை பள்ளி இன்று மழை கனமழை

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வரும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுமக்களும் விவசாயிகளும் இந்த மழையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டுள்ளனர்.

மழை மாணவி

மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மற்றும் விவசாயிகள் வானிலை நிலவரத்திற்கு ஏற்பத் தங்களது பணிகளைத் திட்டமிட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் வானிலை எத்தகைய மாற்றங்களைச் சந்திக்கும் என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.