இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; 6 மாவட்டங்களில் மிக கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் நிலவுகின்றன.

காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

அதே வேளையில், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, தேனி, கோயம்புத்தூர் (மலைப்பகுதிகள்) மற்றும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 - 50 கி.மீ வேகம்) கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.