இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
Aug 28, 2026, 15:50 IST
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் தட்பவெப்ப நிலை மாற்றத்தைத் தொடர்ந்து, இன்று மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர தமிழகப் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் லேசான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணக்கிட்டுள்ளது.
