தமிழகத்தில் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

வட தமிழகக் கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ஆகஸ்ட் 15-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 13-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.