மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 
மக்களே உஷார்..! புதிய காற்றழுத்த தாழ்வு..! 23 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிக கன முதல் அதி கன மழை எச்சரிக்கை

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவக்கூடும். மேலும், வரும் ஜூலை 16-ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பான அளவை விட 2°C முதல் 4°C வரை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மழை பெய்வதற்கான வாய்ப்பு 10% ஆக மட்டுமே உள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பொதுமக்கள் அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.