தமிழகத்தில் செப்.19 வரை கனமழை தொடரும் - வானிலை மையம் எச்சரிக்கை!

 
மழை

தென்மேற்கு மத்தியப் பிரதேசம் முதல் மன்னார் வளைகுடா வரை நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை

செப்டம்பர் 19ம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்; சில இடங்களில் கனமழையும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

செப்டம்பர் 15 முதல் 17 வரை தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.