தமிழகத்தில் இன்றிரவு 9 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை - வானிலை மையம் தகவல்!
Aug 12, 2026, 18:15 IST
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று ஆகஸ்ட் 12ம் தேதி இரவு 7 மணி வரை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

மழை மற்றும் இடி மின்னலின் போது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
