இன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை!
Oct 19, 2026, 15:40 IST
தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோயம்புத்தூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இது தவிர, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை மற்றும் கனமழை காரணமாகச் சாலைகளில் நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள், குறிப்பாக வாகன ஓட்டிகள் அனைவரும் தேவையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
