இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை - பத்திரம் மக்களே... குடையோடு கிளம்புங்க!

 
மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

தமிழகத்தில் நிலவும் வானிலை மாற்றத்தின் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று 21 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை

நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்றும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மழை மாணவி

மேலும், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், மதுரை, கடலூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.