கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து... சுற்றுலாப் பயணிகள் உட்பட 7 பேர் பலி!

 
கென்யா ஹெலிகாப்டர்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில், சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கென்யாவில் உள்ள புகழ்பெற்ற லைசபா தேசிய பூங்காப் பகுதியைச் சுற்றிப் பார்ப்பதற்காக விமானி ஒருவருடன் 6 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஹெலிகாப்டரில் சென்றுள்ளனர். ஹெலாக்வா மலைப்ப பகுதி அருகே பறந்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் மலை மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

கென்யா ஹெலிகாப்டர்

இந்த கோர விபத்தில் சிக்கி ஹெலிகாப்டரில் பயணித்த 6 சுற்றுலாப் பயணிகள் மற்றும் விமானி உட்பட மொத்தம் 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்துக் கென்யா நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.