தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு!

 
தைவான்

 தைவானில் மிக  சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து   தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்களை  இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. 0905247906 என்ற எண்ணிலும், ad.ita@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொண்டு உறவினர்களின் நிலை அறியலாம். அவர்களுக்கு தகவல்களை பரிமாறலாம்.  தைவான் தலைநகர் தைபேவில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.2 ஆக பதிவானதை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என இந்திய தைபே சங்கம்  இந்தியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  


ஜப்பானை இன்று அதிகாலை சுனாமி தாக்கியதை அடுத்து தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் நொறுங்கி இடிந்து விழுந்தன. ஜப்பானை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் தைவானின் தலைநகர் தைபேவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.4 ரிக்டர் அளவு பதிவான இந்த நில நடுக்கம் தைவானில் பேரழிவை ஏற்படுத்தியது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவு பயங்கரமான நிலநடுக்கமாக இது பதிவான நிலையில், உடனடியாக தைவானில் மின்சாரம் முழுவதும் துண்டிக்கப்பட்டது. 
 


தைவானின் ஹுவாலியன்  நகரில்  கட்டிடங்கள் இடிந்து விழுந்து நொறுங்கியது. உயிரிழப்புகள் குறித்த முதல்கட்ட தகவல்கள் வெளியாகவில்லை. ரயில்கள், பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருந்தவர்களும் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்தனர். அதிகளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

ஜப்பான் சுனாமி
 

நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த 15 நிமிடத்தில் ஜப்பானின் யோனகுனி கடலோரத்தில் அலைகள் மிக அதிக அளவிலான உயரத்திற்கு எழும்பியது. இதைத் தொடர்ந்து ஜப்பானில் சுனாமி பேரலைகள் கடற்கரையை தாக்கியது. அதேபோல அருகில் உள்ள மற்றொரு நகரின் கடலோரத்திலும் சுனாமி தாக்கியது. 

ஜப்பானின் கடலோரப் பகுதியில் 3 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ஜப்பானின் ஓகினவா மாகாணத்தில் கடலோர பகுதியிலிருந்து உடனடியாக மக்களை வெளியேற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்