வெயிலில் சருமப்பராமரிப்புக்கு எளிய டிப்ஸ் இதோ!

கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. 2024ஐ பொறுத்தவரை வெகு சீக்கிரமாகவே கோடை காலம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயில் காலத்தில் சருமம் வெயிலில் வாடி வதங்கி விடும். இதனால் சருமப் பிரச்னைகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உண்டு கோடைக்காலத்தில் சிறிது நேரம் வெளியில் சென்றாலும் சருமம் வாடி கருப்பாக மாறிவிடும் அபாயம் உண்டு. சூரியனின் புற ஊதாக்கதிர்கள் தோல் மற்றும் முடியை சேதப்படுத்தி விடுகின்றன. சன்ஸ்கிரீன் மூலம் சூரியனின் பாதிப்புகளை குறைக்கலாம். ல் வெயிலைத் தடுக்கவும் உங்கள் சருமம் மற்றும் தலைமுடியை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்கவும் இயற்கையான முறையில் எளிதான வீட்டு வைத்தியத்தை கடைப்பிடிக்கலாம்.
வழக்கமாக சன்ஸ்கிரீன், பாதுகாப்பு உடைகள் மற்றும் அதிக சூரிய ஒளியைத் தவிர்ப்பது போன்ற முன்னெச்சரிக்கைகள் எடுத்திருப்போம் தான் ஆனால் இவை மட்டும் போதாது. புதிய கற்றாழை ஜெல்லை சூரிய ஒளி படும் இடங்களில் தடவி வர சருமத்தில் படரும் கருமையை குறைத்து பொலிவுடன் இருக்க வைக்கிறது. வீட்டில் சாதாரணமாக நாம் உபயோகப்படுத்தும் தேங்காய் எண்ணெயை வெயிலில் செல்வதற்கு முன் லேசாக தேய்த்துக் கொண்டாலே மாய்ச்சரைசர் போல் செயல்படுகிறது.
கோடைக் காலத்தில் வெளியே செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சன்ஸ்கிரீனைப் பயன்படுத்தலாம்.இதன் மூலம் சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். வெயிலில் எரிந்த பகுதிகளில் வெள்ளரிக்காய் துண்டுகளை வைப்பதால் குளிர்ச்சியாக பொலிவுடன் மாறும். சருமத்தில் கருத்து காணப்படும் இடங்களில் தயிரை தடவி 15-20 நிமிடங்கள் வைத்திருக்கலாம். இதன் பிறகு குளிர் நீரில் கழுவி வர சருமம் பளபளக்கும் கோடை காலத்தில் எலுமிச்சை, நெல்லிக்காய், ஆரஞ்சு உட்பட வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பழங்கள், நீர்ச்சத்து காய்கறிகள் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!