சுக்கிரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. பொற்காலம் துவங்குது... வாய்ப்புகளைத் தவற விடாதீங்க!

 
சுக்கிரன்

ஜோதிட சாஸ்திரத்தில் சுப கிரகமாகவும், செல்வம், மகிழ்ச்சி மற்றும் ஆடம்பர வாழ்விற்கு அதிபதியாகவும் கருதப்படும் சுக்கிர பகவான், தனது ராசியை மாற்றுகிறார். கும்ப ராசியிலிருந்து வெளியேறி, தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால், இந்த நான்கு ராசிகளுக்குப் பொற்காலம் தொடங்கவுள்ளது. இந்த காலகட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகளில் நான்கு ராசிக்காரர்களுக்குத் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் உண்டாகிறது.

1. மேஷம் : எதிர்பாராத பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் வசூலாகும். புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.

திரிகிரகி சந்திரன் குரு சுக்கிரன்

2. கடகம் : குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்புள்ளது. கணவன் - மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றம் காணப்படும்.

3. தனுசு :  நீண்ட நாட்களாக வாட்டி வந்த உடல்நலப் பாதிப்புகள் நீங்கி, சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். ஆன்மீகப் பயணங்கள் மூலம் மன அமைதி கிடைக்கும்.

சனி சுக்கிரன் யோகம் அதிர்ஷ்டம் ராசி

4. மீனம் : சுக்கிரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், வசதி வாய்ப்புகள் பெருகும். தோற்றத்தில் பொலிவு கூடும். ஆடம்பரப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும். எடுக்கும் அனைத்து காரியங்களிலும் தடையின்றி வெற்றி காண்பீர்கள்.

சுக்கிரனின் இந்த மாற்றத்தால் கலைத்துறை, ஆபரணத் தொழில், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆடைத் துறையில் இருப்பவர்களுக்குப் பல மடங்கு லாபம் கிடைக்கும். மற்ற ராசிக்காரர்கள் சுக்கிர வாரங்களில் மகாலட்சுமியை வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.