டெல்லியில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் - 4 பேர் கைது!
தலைநகர் டெல்லியில் ரூ.50 கோடி சர்வதேச மதிப்பு கொண்ட ஹெராயின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இதனுடன் தொடர்புடைய சட்டவிரோத உற்பத்தி ஆலையைக் கண்டுபிடித்து 4 பேரைக் கைது செய்துள்ளனர்.
டெல்லி பேகம்பூர் பகுதியில் கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காவல்துறை நடத்திய சோதனையில், சொகுசு காரில் 300 கிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்திச் சென்ற லட்சுமண் ஹூடா என்பவர் பிடிபட்டார்.

அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில், லக்னோவின் சீதா காலனியில் ரகசியமாக இயங்கி வந்த சட்டவிரோத ஹெராயின் உற்பத்தி ஆலையை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட 6 கிலோ ஹெராயின் உட்பட மொத்தம் 7 கிலோ ஹெராயின் மற்றும் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சர்வதேச சந்தையில் இவற்றின் மதிப்பு ரூ.50 கோடி எனக் மதிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஆலை நடத்தி வந்த மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 4 நபர்களைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
