'நலமாக இருக்கிறார்... விரைந்து குணமடைகிறார்... சத்குரு ஜக்கியின் மகள் தகவல்! வீடியோ உள்ளே!

 
சத்குரு

உயிருக்கு ஆபத்தான நிலையில்,  மூளையில் ஏற்பட்ட ரத்தகசிவு மற்றும் வீக்க்கம் காரணமாக கடந்த ஞாயிறு அன்று டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜக்கி வாசுதேவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 
இந்நிலையில், அவரது மகள் ராதே ஜக்கி, சத்குரு நலமாக இருப்பதாகவும், விரைவில் குணமடைந்து வருவதாகவும் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தகவலைப் பகிர்ந்துள்ளார்.
"நமஸ்காரம், சத்குரு நன்றாக இருக்கிறார். விரைவில் குணமடைகிறார்" என்று ராதே ஜக்கி இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


சத்குருவின் மகள், மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் நரம்பியல் நிபுணரான டாக்டர் வினித் சூரி சத்குருவின் உடல்நிலை குறித்து விரிவாகப் பேசிய வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு தலைமை தாங்கிய டாக்டர் வினித் சூரி, சத்குரு சீரான முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அவரது மூளை, உடல் மற்றும் முக்கிய அளவுருக்கள் இயல்பான நிலைக்கு மேம்பட்டுள்ளதாகவும் கூறினார்.
சத்குருவுக்கு சமீபத்தில் உயிருக்கு ஆபத்தான மருத்துவ நிலை ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்" என்று ஈஷா அறக்கட்டளையும் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

சத்குரு

கடந்த நான்கு வாரங்களாக சத்குரு கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார்....மார்ச் 14 அன்று மதியம் அவர் டெல்லிக்கு வந்தபோது தலைவலி மிகவும் கடுமையானது. அதே நாளில் மாலை 4.30 மணிக்கு சத்குருவுக்கு அவசர  எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யப்பட்டது, அதில் மூளையில் இரத்தகசிவு இருந்தது தெரியவந்தது. மூளையில், கடந்த 3-4 வாரங்களில் நீடித்த இரத்தப்போக்குக்கான சான்றுகள் மற்றும் முந்தைய 24-48 மணிநேர பரிசோதனையில் புதிய இரத்தப்போக்கு உருவாகியதற்கான சான்றுகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நிலைமை மோசமடைந்ததால், மார்ச் 17 அன்று புது தில்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு மண்டை ஓட்டில் ஏற்பட்ட இரத்தப்போக்கைப் போக்க அவசர மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web