“அவன.. விடவே மாட்டேன்...” கதறும் மகள்... நெல்லையில் இரட்டைக்கொலை!

நேற்றைய தினம் இத்தனை துயரமாக விடியும் என்று அந்த தம்பதியர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில், கணவனை விட்டுப் பிரிந்து தங்களுடன் வந்து மகள் தனியே வாழ்ந்து வந்த நிலையில், மகளுக்கு அடுத்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்து வந்த மாமனாரையும், மாமியாரையும் துடிதுடிக்க மருமகனே வெட்டிக் கொலைச் செய்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லை அருகே ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53). இவர்களுக்கு ஜெனிபர்(30) என்ற மகள் இருக்கிறார்.
இந்நிலையில், ஜெனிபர் அதே தெருவைச் சேர்ந்த மரிய குமார்(36) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் கணவரை விட்டுப் பிரிந்துச் சென்று தனியாக பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வடநாட்டைச் சேர்ந்த வேறு ஒருவரை காதலித்து வந்த நிலையில், அவருடன் குடும்பம் நடத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மரியக்குமார் அவரது மாமனார் பாஸ்கர் மற்றும் மனைவி செல்வராணியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.
இது குறித்த தகவலறிந்து பெருமாள்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி மரியகுமாரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பெற்றோர்கள் இருவருமே கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதை அறிந்து கதறியழுத மகளை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தேற்றினார்கள்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க