கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை தீர்த்துக் கட்ட 2வது மனைவி போட்ட பிளான்!

 
மகாலட்சுமி

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள வில்லூரைச் சேர்ந்தவர் குருநாதன் (55). பால் விற்பவர். இவர் தனது 2வது மனைவி மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் குருநாதன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். குருநாதனின் முதல் மனைவி மகன் ராமன் (37) தந்தை சாவில் சந்தேகம் இருப்பதாக வில்லூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், குருநாதனின் 2வது மனைவி மகாலட்சுமி மற்றும் அவரது கள்ளக்காதலன் சுப்ரமணி (49) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், வில்லூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணிக்கும், குருநாதனின் 2வது மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இதையறிந்த குருநாதன், இரண்டு மாதங்களுக்கு முன், சுப்ரமணியுடன் மனைவியை அனுப்பி வைத்தார்.

ஆனால் சுப்ரமணியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் வந்து கணவருடன் வசித்து வந்தார் மகாலட்சுமி. ஆனால், மீண்டும் இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர். இதை குருநாதன் கண்டித்ததால், இருவரும் அவரை கொல்ல திட்டமிட்டனர். அவர்கள் திட்டப்படி கோவைக்கு சென்ற மகாலட்சுமி, கடந்த 27ம் தேதி இரவு வீட்டில் தனியாக படுத்திருந்த குருநாதனை கழுத்தை நெரித்து கொன்றார் சுப்ரமணி என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இருவரும் பேரையூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web