இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை - இந்து முன்னணி நிர்வாகி கைது!
Sep 6, 2026, 09:20 IST
தென்காசி மாவட்டம் அடைக்கலப்பட்டணம் வேதம்புதூரைச் சேர்ந்தவர் சக்திவேல் (47). இவர் கீழப்பாவூர் ஒன்றிய இந்து முன்னணி செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அங்குச் சென்ற சக்திவேல், அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் 'சிங்கப்பெண் அதிரடிப்படை'யில் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பாவூர்சத்திரம் போலீசார், சக்திவேலை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
