இரும்பு கம்பியால் நாயை அடித்து கொன்ற இந்து முன்னணி கட்சி நிர்வாகி.. விசாரணையில் அதிர்ச்சி!

 
ஈஸ்வரன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை பால்கானிமேடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவர் இந்து முன்னணி கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே வசித்து வந்த பாண்டியம்மாள் என்பவர் வீட்டில் நாயை வளர்த்து வந்தார். இந்த நாய் ஈஸ்வரனையும், அவரது குழந்தைகளையும் துரத்திச் சென்று, அவர்கள் நடந்து செல்லும் போதெல்லாம் குறைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நாயின் மீது ஆத்திரமடைந்த ஈஸ்வரன், தனது நண்பருடன் சேர்ந்து நேற்று நாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்று அருகில் உள்ள குளத்தில் வீசியுள்ளார். பின்னர் நாயை காணததால் தேடி வந்த பாண்டியம்மாள் குளத்தில் நாய் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து நாயின் உரிமையாளர் பாண்டியம்மாள் வடமதுரை போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்தனர். இதனிடையே, நாயின் சடலம் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவர் மூலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நாயின் உடல் புதைக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web