’இந்துக்களே திரும்பிப் போ’.. கோவில் மீது மதவெறி தாக்குதல் நடத்திய அமெரிக்கர்கள்!

 
அமெரிக்கா கோவில்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 'பாப்ஸ்' (BAPS) (போச்ச சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா) என்ற அமைப்பின் கீழ் இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் இந்து கோவில்கள் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. இந்நிலையில், கலிபோர்னியாவின் சாக்ரமென்டோவில் அமைந்துள்ள 'பாப்ஸ்' அமைப்பின் இந்து கோவிலில் சில மர்மநபர்கள் மத வெறுப்புணர்வு வாசகங்களை எழுதி உள்ளனர்.

அமெரிக்கா கோவில்

அதில் "இந்துக்களே திரும்பிப் போ" என்று எழுதப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த 17ம் தேதி, நியூயார்க்கில் உள்ள, 'பாப்ஸ்' அமைப்பால் நிர்வகிக்கப்படும், மெல்வில் பகுதியில் உள்ள, ஸ்ரீ சுவாமி நாராயணன் கோவிலிலும், மதத்திற்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டன. இது குறித்து கோயில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்துள்ள நிலையில், வெறுப்புணர்வு உரை எழுதியவர்களை போலீசார் இணையதளத்தில் தேடி வருகின்றனர்.

கடந்த 10 நாட்களில் இது இரண்டாவது சம்பவம் என்பதால் இந்துக்கள் கவலையடைந்துள்ளனர். அமெரிக்காவில் இந்துக்கள் மீதான வெறுப்பு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web