மே 15 வரை வரலாற்று நினைவு சின்னங்கள் மூடப்படும்!மத்திய அரசு அதிரடி!

மே 15 வரை வரலாற்று நினைவு சின்னங்கள் மூடப்படும்!மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களில் அசுர வேகம் எடுத்து பரவி வருவதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனடிப்படையில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ள அனைத்து புராதனச் சின்னங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மே 15ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 15 வரை வரலாற்று நினைவு சின்னங்கள் மூடப்படும்!மத்திய அரசு அதிரடி!

முதல் அலையை காட்டிலும் 2வது அலை கொத்து கொத்தாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு , வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மே 15 வரை வரலாற்று நினைவு சின்னங்கள் மூடப்படும்!மத்திய அரசு அதிரடி!

11 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், வரும் நாட்களில் தடுப்பூசி போடுவது மேலும் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி போட்டபிறகு கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்றும் ஆனால் வைரஸின் வீரியம் அதிகம் இருக்காது எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில், நாடு முழுவதும் புராதனச் சின்னங்களையும், இடங்களையும், அருங்காட்சிகளையும் மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.

மே 15 வரை வரலாற்று நினைவு சின்னங்கள் மூடப்படும்!மத்திய அரசு அதிரடி!

மே 15ம் தேதி வரை புரதானச் சின்னங்கள் மூடப்பட்டிருக்கும் என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை இது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மாமல்லபுரம், தாஜ்மஹால் உள்ளிட்ட புராதனச் சின்னங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web