Hockey WC | இந்திய மகளிர் அணி கோல் மழை... தென் ஆப்பிரிக்காவை 6-1 என பந்தாடி அபார வெற்றி!

 
ஹாக்கி மகளிர்ஹாக்கி இந்தியமகளிர்

நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 6-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் வீராங்கனைகள் சுனேலிதா டோப்போ, நவ்நீத் கவுர், சுசீலா சானு, தீபிகா, லால்ரெம்சியாமி மற்றும் சகாஷி ராணி ஆகிய ஆறு பேரும் தலா ஒரு கோல் அடித்து அசத்தினர்.

இந்திய மகளிர் ஹாக்கி

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி பதிவு செய்யும் முதல் வெற்றி இதுவாகும். 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தனது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவுக்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் சமன் செய்திருந்தது.

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திப் பலமான நிலையில் இருக்கும் இந்திய மகளிர் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வலுவான இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.