வண்ணப்பொடிகளை தூவி உற்சாகம்... களைகட்டிய ஹோலிப் பண்டிகை!

 
ஹோலி

இன்று மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை  கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வட மாநிலங்களில் வசித்து வரும் மக்கள்   இன்று அதிகாலை முதலே வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.ஹோலி பண்டிகையானது மழை மற்றும் குளிர்காலத்தை அடுத்து  வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஹோலி

அந்த வகையில் சென்னையில் சௌகார்பேட்டையில்  ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. ஹோலி கொண்டாட்டத்தில் சின்னஞ்சிறுவர்கள், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.இன்று அதிகாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து இப்பகுதிக்கு வந்த இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினர்   ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி முழுவதுமே வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.

ஹோலி

இக்கொண்டாட்டத்தில்  வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவரும், வண்ண பொடி கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் அன்பையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் வரை இந்த கொண்டாட்டம் தொடரும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web