இனி காணும் பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை ரத்து? பசுமை தீர்ப்பாயம் கடும் எச்சரிக்கை !

 
பசுமை தீர்ப்பாயம்


தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காணும் பொங்கல் நாளில் பெருந்திரளான மக்கள் சுற்றுலாத் தளங்களில் கூடி அன்பை பகிர்ந்து மகிழ்ந்தனர் . அந்த வகையில் சென்னை மக்கள் காணும் பொங்கலான ஜனவரி  16ம் தேதி  மெரினா கடற்கரை உட்பட பல  சுற்றுலா பகுதிகளில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர்.

பசுமை தீர்ப்பாயம்

இவர்கள் அங்கு இருக்கும் தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட பிறகு  குப்பைகளை கடற்கரையிலேயே போட்டு சென்றுள்ளனர். இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. மெரினாவில் மட்டும் பல நூறு டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

மெரினா

இந்நிலையில் மெரினா கடற்கரை குப்பை கூளமாக மாறுவதற்கு மக்கள் தான் காரணம் என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம்  கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் காணும் பொங்கல் அன்று  விடுமுறை அளிப்பதை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வோம் எனவும் பொதுமக்களுக்கு  பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web