விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

 
விடுமுறை

விழுப்புரம், கடலூர்  மாவட்டங்களில் பெங்கல் புயல் காரணமாக நாளை அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மழை

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த புயல் நாளை மறுதினம் நவம்பர் 30ம் தேதி கடலூருக்கும் சென்னைக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மழை

இந்நிலையில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நாளை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட் ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

From around the web