இந்த மாசத்தில 3 நாட்கள் தொடர் விடுமுறை!

 
மாணவர்கள் விடுமுறை மாணவர்கள் விடுமுறை

கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. வகுப்புகள் தொடங்கிய சில நாட்களிலேயே தற்பொழுது இன்றும், நாளையும் வார இறுதி விடுமுறை கிடைத்துள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடுமுறை

இந்த ஜூன் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 9 நாட்கள் வரை விடுமுறை நாட்கள் வரவுள்ளன. இதில் 4 வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மூலமாகவே வழக்கம்போல் 8 நாட்கள் விடுமுறை மாணவர்களின் கணக்கில் வந்து சேருகிறது.

பள்ளி புத்தகப்பை விடுமுறை  மாணவர்கள் திறப்பு

இதுதவிர வரும் ஜூன் 26 வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகையை முன்னிட்டு அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதனைத் தொடர்ந்து வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து அந்த வாரத்தில் மட்டும் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை பள்ளிகளுக்குக் கிடைக்கிறது.